கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் + "||" + West Indies won series against Sri Lanka

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்போட்டியில் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.
பல்லகெலே, 

வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரான்டன் கிங், ஹெட்மயர் தலா 43 ரன்களும், ஆந்த்ரே ரஸ்செல் 40 ரன்களும் (14 பந்து, 6 சிக்சர்) விளாசினர். இந்த வெற்றியின் மூலம் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இலங்கையிடம் இழந்ததற்கு பதிலடி கொடுத்து விட்டது.