கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உதவி பயிற்சியாளராக ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஆன்டி பிளவர் நியமணம்


கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உதவி பயிற்சியாளராக ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஆன்டி பிளவர் நியமணம்
x
தினத்தந்தி 9 March 2020 12:52 AM GMT (Updated: 9 March 2020 12:52 AM GMT)

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உதவி பயிற்சியாளராக ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஆன்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


* ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடருடன் வங்காளதேச ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மோர்தசா விலகினார். இந்த நிலையில் வங்காளதேச அணியின் ஒரு நாள் போட்டிக்கான முழு நேர கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.

* ஐபிஎல் தொடரில் விளையாடும் எட்டு அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உதவி பயிற்சியாளராக ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன் ஆன்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆன்டிபிளவர், ஐ.பி.எல். அணியுடன் பணியாற்ற இருப்பது இதுவே முதல் முறையாகும்.

* இந்திய ஆக்கி சங்கம் சார்பில் இந்த ஆண்டுக்கான சிறந்த ஆக்கி வீரர் விருதை தேசிய அணியின் கேப்டனான மன்பிரீத் சிங்கும், சிறந்த வீராங்கனை விருதை பெண்கள் அணியின் கேப்டன் ராணி ராம்பாலும் பெற்றனர். டெல்லியில் நடந்த விழாவில் அவர்களுக்கு விருதுடன் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் இடம் பிடித்தவரான ஹர்பிந்தர்சிங் பெற்றார். அவருக்கு விருதுடன் ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.

* இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘ஜலஜ் சக்சேனா என்ற சுழற்பந்து வீச்சாளர் இருக்கிறார். முதல்தர போட்டிகளில் கலக்கி வரும் அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்வது குறித்து பரிசீலிக்க தேர்வு குழுவினர் மறுக்கிறார்கள். இதே போல் வஹாரே முதல்தர போட்டிகளில் தொடர்ந்து அபாரமாக பந்து வீசி வருகிறார். அவரை கண்டுகொள்வதில்லை. பிறகு, இந்திய கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் குறைந்து வருவதாக சொல்வார்கள். களத்தில் பந்தை சுழற்றக்கூட செய்யாத வாஷிங்டன் சுந்தருக்கு (தமிழக ஆல்-ரவுண்டர்) தொடர்ந்து ஏன் வாய்ப்பு வழங்குகிறார்கள் என்பது புரியவில்லை. வாஷிங்டன் சுந்தரால் ஓரளவு பேட்டிங் செய்ய முடியும் என்றால் அவரை போல் பேட்டிங் செய்து, சுழலிலும் மிரட்டும் ஜலஜ் சக்சேனாவை சேர்க்கலாம்’ என்று கூறியுள்ளார்.

Next Story