கிரிக்கெட்

சென்னையில் பயிற்சியின் போது டோனியின் காலில் விழுந்த ரசிகர் + "||" + The fan who fell on Dhoni's leg while training in Chennai

சென்னையில் பயிற்சியின் போது டோனியின் காலில் விழுந்த ரசிகர்

சென்னையில் பயிற்சியின் போது டோனியின் காலில் விழுந்த ரசிகர்
சென்னையில் பயிற்சியின் போது டோனியின் காலில் விழுந்த ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் முதலாவது ஆட்டம் ஏப்ரல் 2-ந்தேதி (சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதல்) நடக்கிறது.


இதையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங், கரண் ஷர்மா, பியுஷ் சாவ்லா, சாய் கிஷோார், ஜெகதீசன் உள்ளிட்டோர் சேப்பாக்கத்தில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு எந்தவித சர்வதேச போட்டியிலும் விளையாடாத டோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் இப்போதே ஆவல் கொண்டுள்ளனர். நேற்று பயிற்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள், ‘டோனி...டோனி.... தல...தல’ என்று கோஷமிட்டனர். 

இதற்கிடையே ஒரு ரசிகர் திடீரென மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து டோனியை நோக்கி ஓடினார். டோனியின் காலில் விழுந்து வணங்கிய அந்த ரசிகரை பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து எச்சரித்து வெளியே அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினமும் இதே போல் ரசிகர் ஒருவர் டோனியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் தவிர தமிழ்நாட்டில் இன்று முதல் பஸ் போக்குவரத்து அனைத்து கடைகளும் திறக்க அனுமதி
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக தமிழகம் முழுவதும் இன்று முதல் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. அனைத்து பெரிய கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2. சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2500-ஐ நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2500-ஐ நெருங்குகிறது.
3. சென்னையில் கொரோனா நோயாளி தற்கொலை - ஆஸ்பத்திரியில் தூக்கில் தொங்கினார்
சென்னையில் கொரோனா நோயாளி ஒருவர் ஆஸ்பத்திரியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
4. சென்னையில் இருந்து மணிப்பூர் சென்ற வாலிபருக்கு கொரோனா தொற்று
சென்னையில் இருந்து மணிப்பூர் சென்ற வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. சென்னை சென்டிரலில் ரெயில்வே போலீசார் 23 பேருக்கு கொரோனா - அவர்களது குடும்பத்தினர் 9 பேர் பாதிப்பு
சென்னை சென்டிரல் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் 23 போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.