கிரிக்கெட்

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 3 கேலரிக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம் + "||" + At Chepauk Stadium 3 Sealed disposal of the gallery

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 3 கேலரிக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 3 கேலரிக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்
கிரிக்கெட் ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்ட போது அதில் ஐ, ஜே, கே ஆகிய மூன்று கேலரிகள் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டதாக 2013-ம் ஆண்டு ‘சீல்’ வைக்கப்பட்டது.
சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் புதுப்பிக்கப்பட்ட போது அதில் ஐ, ஜே, கே ஆகிய மூன்று கேலரிகள் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டதாக 2013-ம் ஆண்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதனால் இங்கு போட்டிகள் நடந்தாலும் அந்த கேலரிகளை மட்டும் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதையடுத்து அந்த கேலரி பகுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் கேலரியை பயன்படுத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.


இந்த நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சியின் மண்டல அதிகாரி ரவிக்குமாரின் முன்னிலையில் அந்த மூன்று கேலரிகளின் சீல் நேற்று அகற்றப்பட்டது. இதனால் இனி இந்த கேலரிகளிலும் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்க முடியும்.