கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் ஆர்.எம்.கே. அணி வெற்றி + "||" + Over 20 cricket In the opening game RMK The team wins

20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் ஆர்.எம்.கே. அணி வெற்றி

20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் ஆர்.எம்.கே. அணி வெற்றி
சென்னையை அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே.என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் 8-வது மஞ்சுளா முனிரத்தினம் நினைவு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அந்த கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
சென்னை,

கல்லூரியின் இயக்குனர் ஜோதி நாயுடு போட்டியை தொடங்கி வைத்தார். முதல்வர் முகமது ஜூனைத் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஆர்.எம்.கே.-மாதா என்ஜினீயரிங் கல்லூரி அணிகள் சந்தித்தன. முதலில் ஆடிய மாதா என்ஜினீயரிங் கல்லூரி அணி 19.3 ஓவர்களில் 80 ரன்னில் சுருண்டது.

பின்னர் ஆடிய ஆர்.எம்.கே. அணி 13.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மற்ற ஆட்டங்களில் ஜெயா என்ஜினீயரிங் கல்லூரி 9 விக்கெட் வித்தியாசத்திலும், பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி அணி 9 விக்கெட் வித்தியாசத்திலும் எளிதில் வெற்றி பெற்றன.