கொரோனா வைரஸ் தாக்குதல்: மே 28-ந்தேதி வரை இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டி கிடையாது


கொரோனா வைரஸ் தாக்குதல்: மே 28-ந்தேதி வரை இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டி கிடையாது
x
தினத்தந்தி 22 March 2020 12:21 AM GMT (Updated: 22 March 2020 12:21 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சுருத்தல் காரணமாக, மே 28-ந்தேதி வரை இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரை எந்தவிதமான தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படாது என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் அங்கு உள்நாட்டில் நடக்கும் முதன்மையான கிரிக்கெட் போட்டியான கவுண்டி சீசன் தொடங்குவது குறைந்தது 7 வாரங்கள் தாமதம் ஆகிறது. 18 முதல்தர கவுண்டி அணிகள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசித்த பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. எனவே ஜூன் 4-ந்தேதி தொடங்க வேண்டிய இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரும் தள்ளிப்போகிறது.

இதே போல் இலங்கை கிரிக்கெட் வாரியமும் தங்கள் நாட்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை மறுஅறிவிப்பு வரும்வரை தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது.

அயர்லாந்து-வங்காளதேசம் அணிகள் இடையே மே மாதம் நடக்க இருந்த மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.


Next Story