கிரிக்கெட்

சுய தனிமையில் முன்னாள் இலங்கை கேப்டன் சங்கக்கரா + "||" + Sangakkara is a former Sri Lankan captain in his own solitude

சுய தனிமையில் முன்னாள் இலங்கை கேப்டன் சங்கக்கரா

சுய தனிமையில் முன்னாள் இலங்கை கேப்டன் சங்கக்கரா
முன்னாள் இலங்கை கேப்டன் சங்கக்கரா, தன்னை தானே சுய தனிமை செய்து கொண்டுள்ளார்.
கொழும்பு,

சமீபத்தில் லண்டன் சென்றுவிட்டு கொழும்பு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா அளித்த ஒருபேட்டியில், ‘எனக்கு எந்தவித நோய் அறிகுறியும் இல்லை. ஆனாலும் அரசு அறிவுறுத்தலின்படி என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டு இருக்கிறேன். லண்டனில் இருந்து இலங்கை வந்து ஒரு வாரத்திற்கு மேலாகிறது. மார்ச் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் போலீசில் பதிவு செய்து தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நானே முன்வந்து போலீசில் பதிவு செய்து கொண்டு தனிமையை அனுபவித்து வருகிறேன். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த 3 பேர் மருத்துவ பரிசோதனையில் இருந்து தப்பிக்க முயன்றதையும் அறிவேன்’ என்று தெரிவித்துள்ளார்.