கிரிக்கெட்

‘உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி’ - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் புகழாரம் + "||" + World's Best Batsman Virat Kohli - Chanderpaul fame of former West Indies player

‘உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி’ - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் புகழாரம்

‘உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி’ - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் புகழாரம்
தற்போதைய காலக்கட்டத்தில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சந்தர்பால் கூறினார்.
மும்பை,

இந்தியாவில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாட மும்பை வந்து இருந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சந்தர்பால் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-


தற்போதைய காலக்கட்டத்தில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார்? என்று கேட்டால் விராட் கோலி என்றுதான் நான் சொல்வேன். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. எனக்கு பிடித்தமான வீரரும் அவர் தான். அவர் தனது கிரிக்கெட் ஆட்டத்துக்காக கடினமாக உழைக்கிறார். அதை அவரது ஆட்டங்களில் காண முடிகிறது. மேலும் உடல் தகுதிக்காக தனி கவுனம் செலுத்துகிறார். தன் விளையாட்டு திறனை மேம்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புபவர்களில் அவரும் ஒருவர். ஒவ்வொரு நாளும் அவர் தனது திறமையை நிரூபித்து வருகிறார். கடின உழைப்புக்காக அவரை பாராட்டியாக வேண்டும். விளையாட்டில் அவரைப்போல் நீண்ட காலம் உச்சத்தில் இருப்பது எளிதான விஷயம் அல்ல. அவரை போன்று விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் கடினமாக உழைக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பட்டம் வெல்ல வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை பொறுத்தமட்டில் எப்பொழுதும் குறுகிய வடிவிலான போட்டியில் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் உள்ளனர். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் யார் வெல்வார்கள் என்பதை கணிப்பது கடினமாகும். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். குறிப்பிட்ட நாளில் போட்டியில் யார்? சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்தே முடிவு அமையும்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் உள்ளனர். அது எங்களுக்கு சாதகமான அம்சமாகும். 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிரடி பேட்ஸ்மேன்கள், சிறந்த பவுலர்கள் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பார்கள். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த அணியாக வெஸ்ட் இண்டீஸ் விளங்குகிறது. போட்டியில் எந்தவொரு அணியையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெற்றி பெறலாம் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது
அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும் நலமாக இருப்பதாக விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
2. ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசை: கே.எல் ராகுல், விராட் கோலி முன்னேற்றம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி 134 ரன்களை அடித்துள்ளார்.
3. கர்ப்பகாலத்தில் தலைகீழாக யோகாசனம் செய்த அனுஷ்காவின் கால்களை பிடித்து உதவிய விராட் கோலி
நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
4. பேறுகாலத்தில் தலைகீழாக சிரசாசனம் செய்த அனுஷ்கா ஷர்மா!
பேறுகாலத்திலும் தலைகீழாக நின்று யோகா செய்யும் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
5. 2-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு மீண்டும் இமாலய இலக்கை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
இந்திய அணிக்கு 390 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.