கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க அணிக்கு முழுக்கு போடுகிறார், டேன் பீட் + "||" + Dane Piedt to leave South African team

தென்ஆப்பிரிக்க அணிக்கு முழுக்கு போடுகிறார், டேன் பீட்

தென்ஆப்பிரிக்க அணிக்கு முழுக்கு போடுகிறார், டேன் பீட்
தென்ஆப்பிரிக்க அணிக்கு முழுக்கு போட்டுவிட்டு அடுத்த சில மாதங்களில் அமெரிக்காவுக்கு சென்று மைனர் லீக் 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்க உள்ளார், டேன் பீட்.
கேப்டவுன், 

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் டேன் பீட். 30 வயதான இவர் 9 டெஸ்டில் விளையாடி 26 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கேஷவ் மகராஜ், ஷம்சி ஆகியோர் தென்ஆப்பிரிக்க அணியில் நிலையான இடத்தை பிடித்துள்ளதால் இப்போதைக்கு வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை என்று கருதிய அவர், தென்ஆப்பிரிக்க அணிக்கு முழுக்கு போட்டுவிட்டு அடுத்த சில மாதங்களில் அமெரிக்காவுக்கு சென்று மைனர் லீக் 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். 

இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தெரிவித்த டேன் பீட், தென்ஆப்பிரிக்க அணியை துறக்க எடுத்த முடிவு கடினமானது என்றும், அமெரிக்க போட்டியில் ஆடுவதால் அதிக பணம் கிடைக் கும், மேலும் வாழ்க்கை முறையும் சிறப்பானதாக இருக்கும் என்பதாலேயே அங்கு செல்ல இருப்பதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கு கடந்த ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணி அந்தஸ்து கிடைத்தது. அங்கு விளையாடி அமெரிக்க அணியில் இடம் பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆலோசகராக காலிஸ் நியமனம்
தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆலோசகராக காலிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.