கிரிக்கெட்

கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் கிடைத்தால் போதும் என டோனி கூறினார்: வாசிம் ஜாஃபர் + "||" + MS Dhoni Wanted To "Make Rs 30 Lakh" From Cricket And Live Peacefully In Ranchi, Says Wasim Jaffer

கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் கிடைத்தால் போதும் என டோனி கூறினார்: வாசிம் ஜாஃபர்

கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் கிடைத்தால் போதும் என டோனி கூறினார்: வாசிம் ஜாஃபர்
கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் கிடைத்தால் போதும் என இந்திய அணிக்கு அறிமுகமான புதிதில் டோனி கூறியிருந்தார் என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்தார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருந்தாலும், டோனிதான் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான வீரராக உள்ளார். சிறிய நகரமான ராஞ்சியில் இருந்து விளையாட வந்த டோனி, 2004-ல் இந்திய அணிக்கு அறிமுகமான போது இவ்வளவு பெரிய உச்சத்தை எட்டுவார் என்று யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள். ஆனால், கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய சில ஆண்டுகளில் புகழின் உச்சத்தை எட்டிய டோனி,  பல கோடிகளையும் வருவாயாக ஈட்டினார். 

இந்த நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில், தான் இவ்வளவு புகழ் உச்சத்தை எட்டுவோம் என டோனியே எண்ணியிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. 
 
இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாப்பர் தனது டுவிட்டர் தளத்தில், ஓய்வறையில் டோனி கூறிய தகவலை பகிர்ந்து இருக்கிறார். டோனி கிரிக்கெட்டில் அறிமுகமான புதிதில், “ கிரிக்கெட் விளையாடுவதன்  மூலம் ரூ.30 லட்சம் கிடைத்தால் போதும், எஞ்சிய வாழ்க்கை முழுவதையும் ராஞ்சியில் நிம்மதியாக கழிப்பேன்’ என்று கூறியதாக ஜாப்பர் கூறியுள்ளார். 

தனது அசாத்திய விளையாட்டு திறன் மூலம், இன்று உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழும் டோனி, துவக்க காலத்தில்  இவ்வாறு கூறியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட் விசயத்தில் டோனி ஒருபோதும் பாகுபாடு பார்க்கமாட்டார் - ஆர்.பி.சிங்
கிரிக்கெட் விசயத்தில் முடிவு எடுப்பதில் டோனி ஒருபோதும் பாகுபாடு பார்க்கமாட்டார் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார்.
2. சிறிய பேட்டை பயன்படுத்த வேண்டாம் என்று கெஞ்சிய டோனி: நினைவு கூறுகிறார் ஹைடன்
சிறிய பேட்டை பயன்படுத்த வேண்டாம் என்று டோனி கெஞ்சியதாக மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
3. ‘தோல்விக்கு பொறுப்பேற்க டோனி ஒருபோதும் தயங்கியது கிடையாது’ - மொகித் ஷர்மா சொல்கிறார்
அணியின் தோல்விக்கு பொறுப்பேற்க டோனி ஒருபோதும் தயங்கியது கிடையாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா தெரிவித்தார்.
4. கிரிக்கெட் விளையாடிய 20 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்: கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
தர்மபுரியில், ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய 20 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவர்களை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
5. இந்தியாவுக்காக இனி டோனி ஆட விரும்ப மாட்டார்: ஹர்பஜன் சிங்
இந்தியாவுக்காக இனி டோனி ஆட விரும்ப மாட்டார் என இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.