கிரிக்கெட்

வார்னேவின் கனவு டெஸ்ட் அணியில் யாருக்கு இடம்? + "||" + Who's on Warne's Dream Test Team?

வார்னேவின் கனவு டெஸ்ட் அணியில் யாருக்கு இடம்?

வார்னேவின் கனவு டெஸ்ட் அணியில் யாருக்கு இடம்?
வார்னேவின் கனவு டெஸ்ட் அணியில் யாருக்கு இடம்? என்பதை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
சிட்னி, 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, தான் விளையாடிய காலத்தில் சிறந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அவரது கனவு அணியில் மேத்யூ ஹைடன், மைக்கேல் சிலாட்டர், ரிக்கிபாண்டிங், மார்க்வாக், ஆலன் பார்டர் (கேப்டன்), ஸ்டீவ் வாக், ஆடம் கில்கிறிஸ்ட், டிம் மே, கில்லெஸ்பி, மெக்ராத், புரூஸ் ரீட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 

‘என்னுடன் விளையாடிய வீரர்களில் இருந்து தான் இந்த அணியை தேர்வு செய்துள்ளேன். அதனால் தான் ஆஸ்திரேலியாவின் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரான டேவிட் வார்னர் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை’ என்று வார்னே விளக்கம் அளித்தார். ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் வாக் மேட்ச் வின்னர் என்பதை விட பல போட்டிகளில் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றிய வீரராக திகழ்ந்தார்’ என்றும் வார்னே குறிப்பிட்டார்.