கிரிக்கெட்

கிரிக்கெட்டில் மழை பாதிப்பு விதிமுறையை கண்டுபிடித்த லீவிஸ் மரணம் + "||" + Lewis, who invented the rain impact rule In cricket Dies

கிரிக்கெட்டில் மழை பாதிப்பு விதிமுறையை கண்டுபிடித்த லீவிஸ் மரணம்

கிரிக்கெட்டில் மழை பாதிப்பு விதிமுறையை கண்டுபிடித்த லீவிஸ் மரணம்
டக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லீவிஸ் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
லண்டன், 

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மழை காரணமாக பாதிக்கப்படும்பட்சத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு புதிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும். சிக்கலான இந்த வெற்றி இலக்கு கணக்கீட்டு முறையை கணிதவியல் நிபுணர்கள் பிராங்க் டக்வொர்த், டோனி லீவிஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கினார்கள். 1997-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டக்வொர்த் லீவிஸ் விதிமுறையை 1999-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது. 

தற்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது. 2014-ம் ஆண்டில் கணிதவியலாளர் ஸ்டீவன் ஸ்டெர்ன் என்பவரால் நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்ப இந்த விதிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. டக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லீவிஸ் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78 ஆகும். அவரது மறைவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட் விசயத்தில் டோனி ஒருபோதும் பாகுபாடு பார்க்கமாட்டார் - ஆர்.பி.சிங்
கிரிக்கெட் விசயத்தில் முடிவு எடுப்பதில் டோனி ஒருபோதும் பாகுபாடு பார்க்கமாட்டார் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார்.
2. கிரிக்கெட் விளையாடிய 20 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்: கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
தர்மபுரியில், ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய 20 வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவர்களை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
3. கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் கிடைத்தால் போதும் என டோனி கூறினார்: வாசிம் ஜாஃபர்
கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் கிடைத்தால் போதும் என இந்திய அணிக்கு அறிமுகமான புதிதில் டோனி கூறியிருந்தார் என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்தார்.
4. கிரிக்கெட்: ராமச்சந்திரா பள்ளி முதலிடம்
கிரிக்கெட் போட்டியில் ராமச்சந்திரா பள்ளி முதலிடம் பிடித்தது.
5. ‘கிரிக்கெட்டில் சூதாட்டத்துக்கு வீரர்கள் இடம் அளிக்கக்கூடாது’ - ஷேவாக் வேண்டுகோள்
கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்துக்கு இடம் அளிக்காத வகையில் வீரர்கள் செயல்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஷேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.