கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்டில் ‘உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித், வார்னர்’ - டாம் மூடி கணிப்பு + "||" + World's Top openers in 20-over cricket: Rohit, Warner

20 ஓவர் கிரிக்கெட்டில் ‘உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித், வார்னர்’ - டாம் மூடி கணிப்பு

20 ஓவர் கிரிக்கெட்டில் ‘உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித், வார்னர்’ - டாம் மூடி கணிப்பு
20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித், வார்னர் என்று டாம் மூடி கணித்துள்ளார்.
புதுடெல்லி, 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான டாம் மூடியிடம் ரசிகர்கள் ‘டுவிட்டர்’ வாயிலாக பல கேள்விகளை கேட்டனர். 20 ஓவர் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் யார் என்று கேட்ட போது, ‘இது கடினமான கேள்வி. ஆனால் டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ரோகித் சர்மா (இந்தியா) ஆகியோரின் பெயர்களை சொல்வதில் மகிழ்ச்சி அடைவேன்’ என்றார். 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனக்கு பிடித்தமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ், பிடித்தமான கேப்டன் டோனி என்று மற்றொரு கேள்விக்கு பதிலை பதிவு செய்தார். இந்திய கிரிக்கெட்டில் மனம் கவர்ந்த வீரர் விராட் கோலி, பிடித்தமான பீல்டர் ரவீந்திர ஜடேஜா என்றும் கூறினார்.