கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு; பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு + "||" + IPL 2020 Postponed Indefinitely, Decision On September Window After Pandemic

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு; பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு; பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கால வரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
மும்பை,

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 29-ந்தேதி மும்பையில் தொடங்க இருந்தது. கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை (அதாவது இன்று வரை) தள்ளி வைக்கப்பட்டது. 

வெளிநாட்டினருக்கான விசா நிறுத்தி வைக்கப்பட்டதால் வெளிநாட்டு வீரர்களும் இந்தியாவுக்கு வந்து விளையாட முடியாது. மத்திய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நிலைப்பாட்டை பொறுத்து ஐ.பி.எல். கிரிக்கெட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் தீவிரமாகி வருவதால் மே 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதனால் இன்னும் 18 நாட்கள் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ஐ.பி.எல். அணி உரிமையாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிலையில்,  ஐ.பி.எல். போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஒரு வேளை அக்டோபர், நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டால் அந்த சமயத்தில் ஐ.பி.எல். தொடரை நடத்தும் யோசனையும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் டோனி பங்கேற்கிறாரா?
பிசிசிஐயால் நடத்தப்படும் ஐபிஎல் போன்று ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடைபெறுகிறது.
2. ஓய்வு குறித்து பொதுவெளியில் அறிவித்த பிறகே எங்களுக்கு ரெய்னா தகவல் தெரிவித்தார்: பிசிசிஐ
ஓய்வு குறித்த அறிவிப்பை ரெய்னா எங்களிடம் முதலில் தெரிவிக்கவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
3. ஐபிஎல் போட்டித் தொடரை நடத்த மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அடுத்தகட்டப் பணிகள் தொடக்கம்
ஐபிஎல் போட்டித் தொடரை நடத்த மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அடுத்தகட்டப் பணிகளை அணி நிர்வாகங்கள் தொடங்கியுள்ளன.
4. ஐபிஎல்-க்காக டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது; அக்தர் விமர்சனம்
ஐபிஎல்-க்காக டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அக்தர் விமர்சனம் செய்துள்ளார்.