கிரிக்கெட்

தயாராக இருந்தால் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் டோனியை சேர்க்கலாம் - ஹர்பஜன்சிங் கருத்து + "||" + Dhoni can be included in India's squad for the 20-over World Cup if ready - Harbhajan Singh

தயாராக இருந்தால் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் டோனியை சேர்க்கலாம் - ஹர்பஜன்சிங் கருத்து

தயாராக இருந்தால் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் டோனியை சேர்க்கலாம் - ஹர்பஜன்சிங் கருத்து
டோனி தயாராக இருந்தால், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு அவரை தேர்வு செய்யலாம் என்று ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்
கொல்கத்தா, 

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல். போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஹர்பஜன்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘டோனியின் நிலை குறித்து எப்படி தீர்மானம் செய்வீர்கள். ஐ.பி.எல். போட்டியில் அவரது சிறந்த பார்மை பார்ப்பீர்களா? அல்லது கடந்த காலங்களில் அவர் இந்திய அணிக்கு அளித்த பங்களிப்பையும், இந்தியாவின் தலைசிறந்த வீரர்கள் மற்றும் கேப்டன்களில் ஒருவராக விளங்கினார் என்பதன் அடிப்படையில் அவருக்குரிய மரியாதை அளிப்பீர்களா?

டோனி மிகப்பெரிய வீரர். அவரால் முடியுமா? முடியாதா? என்பது குறித்து சொல்ல வேண்டிய தேவையில்லை. அவரது திறமை குறித்து நீங்கள் அதிகம் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு டோனி தேவையென்று நினைக்கும் பட்சத்தில், அவரும் தயாராக இருந்தால், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு அவரை தேர்வு செய்யலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டை நடத்த வேண்டும்: கம்மின்ஸ் வலியுறுத்தல்
20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிப்போனால், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்றும் கம்மின்ஸ் வலியுறுத்தி உள்ளார்.
2. 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைப்பதில் அவசரம் காட்டக்கூடாது - மிஸ்பா உல்-ஹக் வேண்டுகோள்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தள்ளிவைப்பதில் அவசரம் காட்டக்கூடாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. 20 ஓவர் உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடக்க வாய்ப்பில்லை: மார்க் டெய்லர் கருத்து
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்ட காலத்தில் நடக்க வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் கூறியுள்ளார்.
4. 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைக்க வேண்டும்: இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய்
அணிகள் தயாராக காலஅவகாசம் கிடைக்காவிட்டால், 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என்று இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் தெரிவித்துள்ளார்.
5. 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடக்க வேண்டும் - கவாஸ்கர் யோசனை
ஆஸ்திரேலியாவுக்கு பதிலாக இந்த ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடக்க வேண்டும் என்று கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.