கிரிக்கெட்

பாதுகாப்பான சூழல் உருவான பிறகே ஐ.பி.எல். போட்டி தொடங்கும் - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு + "||" + IPL Match begins after the formation of a secure environment - Indian Cricket Board announces

பாதுகாப்பான சூழல் உருவான பிறகே ஐ.பி.எல். போட்டி தொடங்கும் - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

பாதுகாப்பான சூழல் உருவான பிறகே ஐ.பி.எல். போட்டி தொடங்கும் - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
பாதுகாப்பான சூழல் உருவான பிறகே ஐ.பி.எல். போட்டி தொடங்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி, 

கொடிய நோயான கொரோனா வைரசின் தீவிர தாக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசத்தின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் முக்கியம். எங்களது விளையாட்டில் தொடர்புடைய அனைவரின் பாதுகாப்பு தான் எங்களது பிரதான முன்னுரிமையாக இருக்கும். பாதுகாப்பும், உகந்த சூழலும் உருவாகும் போது மட்டுமே 2020-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி தொடங்கப்படும்.

இதை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளோடு, ஐ.பி.எல். அணிகளின் உரிமையாளர்கள், ஒளிபரப்புதாரர்கள், விளம்பரதாரர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நிலைமையை இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து, போட்டியை தொடங்குவதற்குரிய சாத்தியக்கூறு குறித்து ஆராயும். அதே நேரத்தில் அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்வோம்’ என்று அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அக்டோபர், நவம்பரில் ஐ.பி.எல். போட்டியை நடத்த வாய்ப்பு: இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினர் தகவல்
அக்டோபர், நவம்பரில் ஐ.பி.எல். போட்டியை நடத்த வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார்.
2. ‘2010-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் இருந்து கடினமான பாடம் கற்றேன்’ - அஸ்வின் சொல்கிறார்
கடந்த ‘2010-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து கடினமான பாடம் கற்றேன்‘ என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தெரிவித்தார்.
3. ‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம்’ - பாண்ட்யா யோசனை
ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம் என்று பாண்ட்யா யோசனை தெரிவித்துள்ளார்.