கிரிக்கெட் போட்டியில் டோனியின் கோபம்: நினைவு கூர்ந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்


கிரிக்கெட் போட்டியில் டோனியின் கோபம்: நினைவு கூர்ந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்
x
தினத்தந்தி 18 April 2020 5:15 AM GMT (Updated: 18 April 2020 5:15 AM GMT)

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் டோனியின் கோபம் குறித்து சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நினைவு கூர்ந்துள்ளார்.

மும்பை,

அமைதிக்கு பெயர் போன டோனி ஒரு முறை தன்னிடம் கடும் கோபம் அடைந்ததை நினைவு கூர்ந்துள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்,

 ‘இலங்கைக்கு எதிரான அந்த ஆட்டத்தில் குசல் பெரேரா எனது பந்து வீச்சில் பவுண்டரி அடித்தார். உடனே டோனி எனக்கு சில ஆலோசனை வழங்கினார். ஆனால் அவரது யோசனையை பொருட்படுத்தாமல் வீசிய அடுத்த பந்தில் குசல் பெரேரா ரிவர்ஸ் ஸ்வீப் முறையில் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 

அப்போது நிதானத்தை இழந்த டோனி என்னிடம், ‘நான் என்ன பைத்தியமா? நான் 300 போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். நான் சொல்வதை நீ கேட்கமாட்டாயா?’ என்று கடிந்து கொண்டார். ஆட்டம் முடிந்ததும் அவரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். 

இதற்கு முன்பு இது போல் கோபப்பட்டதுண்டா? என்று கேட்ட போது, நான் கடைசியாக கோபப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது என்று சொன்னார்’ என்றார்.

Next Story