கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களாக டோனி, ரோகித் சர்மா தேர்வு + "||" + Dhoni, Rohit Sharma selected as IPL Team cricket's best captains

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களாக டோனி, ரோகித் சர்மா தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களாக டோனி, ரோகித் சர்மா தேர்வு
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களாக டோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அறிமுகமாகி நேற்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதைக் கொண்டாடும் வகையில் இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளிலேயே சிறந்த வீரர்கள், கேப்டன்கள் யார் என்பதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் முன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், வர்ணனையாளர்கள் என்று 50 பேருடன் அலசி ஆராய்ந்தது. அவர்கள் அளித்த ஓட்டு அடிப்படையில் ஐ.பி.எல்.லின் சிறந்த கேப்டன்களாக டோனியும் (சென்னை சூப்பர் கிங்ஸ்), ரோகித் சர்மாவும் (மும்பை இந்தியன்ஸ்) தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சென்னை அணியை எல்லா தடவையும் பிளேஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ள டோனி மூன்று முறை கோப்பையையும் வென்றுத் தந்திருக்கிறார். ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 4 முறை கோப்பையை கைப்பற்றித்தந்த சிறப்புக்குரியவர் ஆவார்.


சிறந்த பேட்ஸ்மேனாக டிவில்லியர்சும் (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்), சிறந்த பந்து வீச்சாளராக மலிங்காவும் (மும்பை இந்தியன்ஸ்), சிறந்த ஆல்- ரவுண்டராக ஷேன் வாட்சனும் (சென்னை) தேர்வாகியுள்ளனர். ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்கள் குவித்தவரான விராட் கோலி (பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்) சிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் ஒரு அணியை சேர்க்க திட்டம்?
அடுத்த ஐ.பி.எல். போட்டியின் போது கூடுதலாக ஒரு அணியை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5-வது முறையாக சாம்பியன்: ‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ - கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு
‘எங்களது திட்டத்தை பந்து வீச்சாளர்கள் நிறைவாக செயல்படுத்தினார்கள்’ என்று சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அசத்திய இந்திய இளம் வீரர்கள்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.