கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் ரோகித் சர்மா - கம்பீர் கருத்து + "||" + IPL Cricket's best captain is Rohit Sharma - Gambhir comment

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் ரோகித் சர்மா - கம்பீர் கருத்து

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் ரோகித் சர்மா - கம்பீர் கருத்து
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் ரோகித் சர்மா என்று கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், டெல்லி எம்.பி.யுமான கவுதம் கம்பீர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன் யார் என்றால் அது ரோகித் சர்மா தான். அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. கோப்பையை வெல்வதில் தான் கேப்டன்ஷிப் திறமை இருக்கிறது. இறுதியில் அவரே ஐ.பி.எல். போட்டியின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக இருப்பார். ஏற்கனவே 4 கோப்பைகளை வென்று இருக்கிறார். ஐ.பி.எல். வாழ்க்கையை நிறைவு செய்யும் போது தனது கேப்டன்ஷிப்பில் ரோகித் சர்மா 6 அல்லது 7 பட்டங்கள் வென்று இருக்கக்கூடும்.


இவ்வாறு கம்பீர் கூறினார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறை மகுடம் சூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ‘ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து சீன ஸ்பான்சர்களை நீக்க வேண்டும்’ - பஞ்சாப் அணி உரிமையாளர் வலியுறுத்தல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து சீன ஸ்பான்சர்களை நீக்க வேண்டும் என்று பஞ்சாப் அணி உரிமையாளர் நெஸ் வாடியா வலியுறுத்தியுள்ளார்.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது இனவெறி பிரச்சினையை எதிர்கொண்டேன் - டேரன் சேமி புகார்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது இனவெறி தாக்குதலுக்கு உள்ளானதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டேரன் சேமி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக டோனி தயாரான விதம் வித்தியாசமாக இருந்தது: ரெய்னா சொல்கிறார்
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக டோனி தயாரான விதம் வித்தியாசமாக இருந்ததாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
4. ‘கும்பிளே தான் சிறந்த கேப்டன்’ - கம்பீர் கருத்து
அனில் கும்பிளே தான் சிறந்த கேப்டன் என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களாக டோனி, ரோகித் சர்மா தேர்வு
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களாக டோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.