கொரோனா: அதிகரித்திருக்கும் குடும்ப வன்முறைக்கு ஒரு லாக்டவுன் வைப்போம் - விராட் கோலி


கொரோனா: அதிகரித்திருக்கும் குடும்ப வன்முறைக்கு ஒரு லாக்டவுன் வைப்போம் - விராட் கோலி
x
தினத்தந்தி 20 April 2020 12:25 PM GMT (Updated: 20 April 2020 12:25 PM GMT)

அதிகரித்திருக்கும் குடும்ப வன்முறைக்கு ஒரு லாக்டவுன் வைப்போம் என விராட் கோலி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா ஊரடங்கால் நாடெங்கும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள்  தெரிவிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், குடும்ப வன்முறைக்கான தீர்வென்ன என்பதை குறித்த ஆலோசனைகளை 
உளவியலாளர்கள் வழங்கி வருகின்றனர்.

சர்வதேச வணிக நாளிதழான ‘பைனான்சியல் டைம்ஸ்’ நாளிதழ், கடந்த வாரம் வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரையில், கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய காலந்தொட்டு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பெருகி உள்ளது என வெளியிட்டது.

தேசிய பெண்கள் ஆணையம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, மார்ச் 22 முதல் ஏப்ரல் 16 வரை குடும்ப வன்முறை தொடர்பான 239 புகார்களை அவர்கள் பெற்றனர். பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 22 முதல் அவர்களுக்கு 123 புகார்கள் வந்துள்ளன. 

லாக்டவுன் செய்யப்பட்டிருக்கும்போது குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு உதவ இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட ஹெல்ப்லைன்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று  (பிடிஐ செய்தி நிறுவனம்) ஏப்ரல் 18ம் தேதி தெரிவித்தது.

இவற்றில் சில ஹெல்ப்லைன்கள் தேசிய அளவில் செயலில் உள்ளன, சில மாநில அளவில் செயலில் உள்ளன. குறிப்பிட்டவை, மற்றவை மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்காக நாடு தழுவிய லாக்டவுனுக்கு மத்தியில், குடும்ப வன்முறை அச்சுறுத்தல் குறித்து விராட் கோலி இன்ஸ்டாகிராமில் வீடியோ செய்தியைப்பகிர்ந்துள்ளார். 

இந்த வீடியோவில் இந்திய கேப்டன் தவிர, அவரது மனைவி மற்றும் நடிகர் அனுஷ்கா ஷர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பெண்கள் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நீங்கள் ஒரு பாதிக்கப்பட்டவராக, சாட்சியாக அல்லது குடும்ப வன்முறையிலிருந்து தப்பியவராக இருந்தால், தயவுசெய்து புகார் அளியுங்கள் என்று விராட் கோலி வீடியோவுக்கு தலைப்பிட்டார். இந்த வீடியோவை அனுஷ்கா ஷர்மாவும் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவில் பாலிவுட் நட்சத்திரங்களான ஃபர்ஹான் அக்தர், கரண் ஜோஹர் மற்றும் மாதுரி தீட்சித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Next Story