கிரிக்கெட்

‘டோனியை மிஸ்டர் ஸ்வீட்டி’ என அன்பாக அழைத்த சாக்‌ஷி! + "||" + MS Dhoni's Wife Sakshi Craves "Attention From Mr. Sweetie" But He Is Busy With His Video Game

‘டோனியை மிஸ்டர் ஸ்வீட்டி’ என அன்பாக அழைத்த சாக்‌ஷி!

‘டோனியை மிஸ்டர் ஸ்வீட்டி’ என அன்பாக அழைத்த சாக்‌ஷி!
தங்கள் வீட்டில் எடுத்த புகைப்படம் ஒன்றைப் டோனியின் மனைவி சாக்‌ஷி பகிர்ந்துள்ளார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. உள்ளூர் போட்டிகளிலும் ஆடவில்லை. இந்திய அணி நிர்வாகமும் அவரை ஓரங்கட்டிவிட்டு விக்கெட் கீப்பிங் பணிக்கு லோகேஷ் ராகுல், ரிஷாப் பண்ட் ஆகியோரை பயன்படுத்தி வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அதன் மூலம் இந்திய அணிக்குள் மறுபிரவேசம் செய்ய வேண்டும் என்று டோனி திட்டமிட்டு இருந்தார். 

ஆனால் கொரோனா வைரஸ் அச்சத்தால் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 15-ந்தேதி வரை தள்ளிவைக்கப்பட்டது.  லாக்டவுன் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதால், பிசிசிஐ ஐபிஎல்லை காலவரையின்றி ஒத்திவைத்தது.

இந்தநிலையில், டோனி இந்த லாக்டவுன் நாட்களை குடும்பத்தினருடனும், வீடியோ கேம்ஸிலும் செலவழித்து வருகிறார். கிரிக்கெட் வீரரின் மனைவி சாக்‌ஷி டோனி, வீடியோ கேம் விளையாடுவதில் பிஸியாக இருந்தபோது அவரது கவனத்தை ஈர்த்தார். 

அதில், கவனத்தை ஈர்ப்பதற்காக டோனியின் கால் விரல்களைக் கடிக்க முயல்வது போன்று பாவனை செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சாக்‌ஷி. டோனியை மிஸ்டர் ஸ்வீட்டி என்றும்  குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை டோனியின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்ந்து வருகிறார்கள்.சாக்‌ஷி தனது கணவரின் படங்களையும் வீடியோக்களையும் அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.