கிரிக்கெட்

பண்ணை வீட்டில் மகளை உற்சாகப்படுத்த பைக்கில் சுற்றி வரும் டோனி! + "||" + "Big Kid And Small Kid": Watch MS Dhoni Enjoy Bike Ride With Daughter Ziva As Pillion

பண்ணை வீட்டில் மகளை உற்சாகப்படுத்த பைக்கில் சுற்றி வரும் டோனி!

பண்ணை வீட்டில் மகளை உற்சாகப்படுத்த பைக்கில் சுற்றி வரும் டோனி!
பண்ணை வீட்டில் டோனி, மகள் ஸிவா உடன் பைக்கில் சுற்றி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஞ்சி,

கொரொனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஷாப்பிங் மால்கள், ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுடன், தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், டோனி இந்த லாக்டவுன் நாட்களை குடும்பத்தினருடனும், வீடியோ கேம்ஸிலும் செலவழித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் கிரிக்கெட் வீரர் டோனி, மகள் ஸிவா உடன் பைக்கில் சுற்றி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது டோனி தனது மகள் ஸிவா உடன் பண்ணை வீட்டில் பைக்கில் சுற்றிவரும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது. ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் டோனி ஏராளமான பைக்குகள், விலை உயர்ந்த கார்கள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டோனியின் மனைவி சாக்‌ஷி எடுத்த இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

டோனி தனது பண்ணை வீட்டில் தோட்ட வேலை செய்யும் வேலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. டோனி, பிளிஸ்சிஸ் ஆகியோரில் வசீகரமானவர் யார்? - இம்ரான் தாஹிர் பதில்
டோனி, பிளிஸ்சிஸ் ஆகியோரில் வசீகரமானவர் யார் என்பது குறித்து இம்ரான் தாஹிர் பதில் அளித்துள்ளார்.
2. மனநல ஆலோசகர் எப்போதும் தொடர்ந்து அணியுடன் இருக்க வேண்டும் - டோனி
மனநல ஆலோசகர் எப்போதும் தொடர்ந்து அணியுடன் இருக்க வேண்டும் என்று டோனி கூறியுள்ளார்.
3. டோனி எனக்கு ஒரு சிறந்த ஆலோசகர் - ரிஷாப் பண்ட்
கிரிக்கெட் களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் டோனி எனக்கு ஒரு ஆலோசகர் போல் உதவியுள்ளார் என ரிஷாப் பண்ட் தெரிவித்துள்ளார்.
4. டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது எளிதல்ல - அசாருதீன் பேட்டி
டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது எளிதல்ல என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்துள்ளார்.
5. கிரிக்கெட் போட்டியில் டோனியின் கோபம்: நினைவு கூர்ந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் டோனியின் கோபம் குறித்து சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நினைவு கூர்ந்துள்ளார்.