கிரிக்கெட்

டோனியை சிஎஸ்கே தேர்வு செய்தது என் இதயத்தை வாள் துளைத்தது போல் இருந்தது - தினேஷ் கார்த்திக் + "||" + CSK picking MS Dhoni over me was 'biggest dagger in my heart': Dinesh Karthik

டோனியை சிஎஸ்கே தேர்வு செய்தது என் இதயத்தை வாள் துளைத்தது போல் இருந்தது - தினேஷ் கார்த்திக்

டோனியை சிஎஸ்கே தேர்வு செய்தது என் இதயத்தை வாள் துளைத்தது போல் இருந்தது - தினேஷ் கார்த்திக்
டோனியை சிஎஸ்கே தேர்வு செய்தது என் இதயத்தை வாள் துளைத்தது போல் இருந்தது என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில்,

2008-ல் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது ஐபிஎல் ஏலம் நடந்தது. அப்போதைய கால கட்டத்தில் நான் தமிழ்நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரராக இருந்தேன்.

 எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் என்னைத் தேர்வு செய்யும் என எண்ணியிருந்தேன். அப்படித் தேர்வு செய்தபிறகு என்னை கேப்டன் பதவியில் அமர்த்துவார்களா என்பது மட்டுமே கேள்வியாக இருந்தது. முதல் வீரராக டோனியை 1.5 மில்லியன் டாலருக்குத் தேர்வு செய்தார்கள்.

நான் இருந்த அறையில் தான் டோனியும் இருந்தார். சிஎஸ்கே அணி தன்னைத் தேர்வு செய்ய உள்ளதாக டோனி என்னிடம் கூறவில்லை. ஒருவேளை அவருக்கு அது தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், டோனியை சிஎஸ்கே தேர்வு செய்தது என் இதயத்தை வாள் துளைத்தது போலிருந்தது. என்னைப் பிறகு தேர்வு செய்வார்கள் என நினைத்தேன். ஆனால் 13 வருடங்கள் ஆகிவிட்டன. அவர்கள் என்னைத் தேர்வு செய்வார்கள் என்று இப்போதும் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் எம்.எஸ்.டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இன்னும் தாம் காத்திருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.