கிரிக்கெட்

இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுக்காகவே விளையாடுவார்கள், அணிக்காக அல்ல- இன்சமாம்-உல்-ஹக் + "||" + Indian Batsmen Played For Themselves, Not For The Team: Inzamam-Ul-Haq

இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுக்காகவே விளையாடுவார்கள், அணிக்காக அல்ல- இன்சமாம்-உல்-ஹக்

இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களுக்காகவே விளையாடுவார்கள், அணிக்காக அல்ல- இன்சமாம்-உல்-ஹக்
இந்திய பேட்ஸ்மேன்கள் அணிக்காக விளையாட மாட்டார்கள் தங்களுக்காகவே விளையாடுவார்கள் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் அணியின் தலைமை தேர்வாளருமான இன்சமாம்- உல்-ஹக் கூறினார்.
இஸ்லாமாபாத்


பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும், தலைமை தேர்வாளருமான இன்சமாம்-உல்-ஹக் யூடியூப் சேனல் ஒன்றுக்கு முன்னாள் வீரர ரமீஸ் ராஜாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

நான் விளையாடும் போது  பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் இடத்தைப் பாதுகாக்க விளையாடுவார்கள், அதே நேரத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அணிக்காக விளையாடுவார்கள். குறிப்பாக இம்ரான்கான் தலைமையில் விளையாடும் போது.

வீரர்கள் தொடர் அடிப்படையில் சிந்திக்கிறார்களானால், அவர்கள் ஒன்றில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு இடம் கிடைக்கும், தோல்வியுற்றால் அவர்கள் கைவிடப்படுவார்கள்.

மோசமான தொடர் அல்லது இரண்டிற்குப் பிறகு இம்ரான் கான் ஒருபோதும் வீரர்களை ஒருபோதும் கைவிட மாட்டார்.

எங்கள் காலத்தில், இந்தியா எங்களை விட பேப்பரில் மிகவும் வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தது. பேட்ஸ்மேன்கள் என்ற எங்கள் சாதனை அவர்களை விட சிறந்தது அல்ல. ஆனால் எங்களில் ஒருவர் 30-40 ரன்கள்  எடுத்தால், நாங்கள் அதை அணிக்காக எடுத்தோம். இந்திய வீரர் ஒரு சதம் அடித்தால் அது அணிக்காக இருக்காது, அவர் தனக்காக விளையாடுவார். அது எங்களுக்கும் அவர்களுக்கும் ஒருவித்தியாசத்தை ஏற்படுத்தியது

இப்போது எங்கள் வீரர்கள் தங்கள் இடத்தை இழந்துவிடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த ஒன்று அல்லது இரண்டு இன்னிங்ஸ் மட்டுமே இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள், எனவே அணிக்கு என்ன தேவை என்பதை அவர்கள் உணரவில்லை.

அதனால்தான், கேப்டனும்-பயிற்சியாளரும் ஒரே பக்கத்தில் இருந்தால், அவர்கள் வீரர்களுக்கு அணியின் தேவைகளுக்கு ஏற்ப விளையாடுவதற்கான பாதுகாப்பையும் நம்பிக்கையையும் அளிக்க முடியும் என்று இன்சமாம் கூறினார்.  

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் முன்னாள் பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என பாகிஸ்தானின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்து உள்ளார்.
2. இந்தியாவுடனான மோதல்: சீனா இராணுவத்தில் புரட்சி வெடிக்க வாய்ப்பு...! மூத்த தலைவர் எச்சரிக்கை
இந்தியாவுடனான மோதல் காரணமாக சீனாவின் இராணுவத்தில் புரட்சி வெடிக்க கண்டிப்பாக வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் மூத்த தலைவர் எச்சரித்துள்ளார்.
3. கராச்சி பங்குசந்தை கட்டிட தாக்குதல: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி
பாகிஸ்தான் தனது உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இந்தியா மீது வீண் பழிசுமத்துகிறது என இந்திய தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
4. ஒசாமா பின்லேடனை தியாகி என குறிப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ;வலுக்கும் எதிர்ப்பு
பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
5. விசா குறித்து எழுத்துபூர்வமாக உத்தரவாதம் கேட்பதா? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இந்தியா பதிலடி
இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க விசா பிரச்சினை எதுவும் இருக்காது என்று எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்த நிபந்தனைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது.