கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்க திட்டம்? + "||" + Plan to postpone the 20-over World Cup cricket tournament next year?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்க திட்டம்?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்க திட்டம்?
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கும் திட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

லண்டன், 

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக இந்த போட்டி திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாக கமிட்டியினர் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் மூன்று விதமான யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று, திட்டமிட்ட தேதியில் நடத்துவது. 2-வது, அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்துவது.

3-வது 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைப்பது. இவற்றில் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்கு உலக கோப்பை போட்டி ஒத்திவைக்கப்பட்டால், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தும் வாய்ப்பு உருவாகும்.

இதே போல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அனேகமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிசுற்று 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2022-ம் ஆண்டுக்கு தள்ளிபோகும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படுமா? - ஐ.சி.சி. இன்று ஆலோசனை
ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை தள்ளிவைப்பது குறித்து ஐ.சி.சி. இன்று ஆலோசித்து முடிவு எடுக்கிறது.
2. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? - ஐ.சி.சி. விளக்கம்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதற்கு ஐ.சி.சி. விளக்கம் அளித்துள்ளது.
3. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று தள்ளிவைப்பு
2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தள்ளிவைக்கப்படுவதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
4. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 5-வது முறையாக ‘சாம்பியன்’
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை பந்தாடி 5-வது முறையாக பட்டத்தை வென்றது.
5. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் இடம் பெறுவாரா? பயிற்சியாளர் பவுச்சர் விளக்கம்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடக்கிறது.