தெண்டுல்கர் பிறந்தநாளில் கவுரவிக்கும் விதமாக வீடியோ பதிவிட்ட பிசிசிஐ; வாழ்த்து மழை பொய்யும் ரசிகர்கள்


தெண்டுல்கர் பிறந்தநாளில் கவுரவிக்கும் விதமாக வீடியோ பதிவிட்ட பிசிசிஐ; வாழ்த்து மழை பொய்யும் ரசிகர்கள்
x
தினத்தந்தி 24 April 2020 9:12 AM GMT (Updated: 24 April 2020 9:12 AM GMT)

சச்சின் தெண்டுல்கர் தன்னுடைய 47வது பிறந்தநாளையொட்டி அவருக்கு உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

மும்பை,

கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவரும், மாயாஜால பேட்டிங் மூலம் எண்ணற்ற சாதனைகளை தன்வசப்படுத்தியவருமான இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 2013-ம் ஆண்டிலேயே கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று விட்டாலும், அவரது புகழ் இன்னும் சற்றும் குறையாமல் கோகினூர் வைரம் போல் ஜொலித்து கொண்டு தான் இருக்கிறது. சரித்திர நாயகன் சச்சின் தெண்டுல்கருக்கு 46 வயது முடிந்து இன்று (வெள்ளிக்கிழமை) 47-வது வயது பிறக்கிறது. வழக்கமாக தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடும் தெண்டுல்கர், கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் உலகமே இன்னல்களை சந்தித்து வருவதால் இந்த முறை தனது பிறந்த நாளை கொண்டாட மாட்டேன் என்று தெரிவித்து விட்டார். கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் முன்னின்று போராடும் டாக்டர்கள், நர்சு, போலீசார் ஆகியோரை பாராட்டும் விதமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்தநிலையில், அவருக்கு உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். தெண்டுல்கரின் பிறந்தநாளுக்கு பிசிசிஐ தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வீடியோ பகிர்ந்துள்ளது. 

அதற்கு, “மாஸ்டர் பிளாஸ்டர் @சச்சின்_ 47 வயதை எட்டியுள்ளார், 2008ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான அவரது புகழ்பெற்ற ஆட்டத்தில் ஒன்றை நாங்கள் புதுப்பிக்கிறோம். தன்னுடைய 41 டெஸ்ட் சதங்களை, 26/11 மும்பை தீவிரவாத தக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பித்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முதல் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்தார். “பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்மேன். விளையாட்டில் நீங்கள் விட்டுச்சென்ற மரபு அழியாது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்,” என்று டுவிட் செய்துள்ளார்.

Next Story