கொரோனா அச்சுறுத்தல்: ஜூலை 1 வரை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்


கொரோனா அச்சுறுத்தல்: ஜூலை 1 வரை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
x
தினத்தந்தி 25 April 2020 5:53 AM GMT (Updated: 25 April 2020 5:53 AM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

லண்டன்,

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் 28 லட்சத்து 27 ஆயிரத்து 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 3 பேர் பலியாகி உள்ளனர். 7 லட்சத்து 98 ஆயிரத்து 331 பேர் மீண்டுள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் 1,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனைதொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,452 ஆனது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. எனினும் தி ஹண்ட்ரெட் போட்டியை ஒத்திவைப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகள் கொண்ட இப்போட்டி ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளதால் இங்கிலாந்தில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Next Story