கிரிக்கெட்

லாக் டவுன்: ரசிகர்களிடம் அறிவுரை கேட்கும் கே.எல்.ராகுல் + "||" + KL Rahul Asks Twitter If He Should “Keep Or Cut” His Hair, Gets Bizarre Replies

லாக் டவுன்: ரசிகர்களிடம் அறிவுரை கேட்கும் கே.எல்.ராகுல்

லாக் டவுன்: ரசிகர்களிடம் அறிவுரை கேட்கும் கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல் அவருடைய புகைப்படத்தைப் பகிர்ந்து, ரசிகர்களிடம் முடி வெட்ட வேண்டுமா, வேண்டாமா என்று அறிவுரையைக் கேட்டுள்ளார்.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வரும் 3ம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்தநிலையில் இந்த லாக் டவுன் 
காரணமாக அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்களுடைய நேரத்தை வீட்டிலேயே செலவழித்து வருகிறார்கள். 

தற்போது லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால், பல ஆண்களுக்கு ஒரு முக்கிய பிரச்சினையாக இருப்பது முடி வளர்ச்சி. அதிகப்படியாக முடி வளர்வதால், அதைக் கட் செய்ய, முகச்சவரம் செய்ய சலூன் கடைகள் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.

தற்போது இருக்கும் சூழ்நிலையில்,  அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலான கேள்வி, வீட்டிலேயே முடி வெட்டிக்கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்பது தான். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் ஹேர்கட் செய்யக் குழப்பத்தில் உள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவருடைய புகைப்படத்தைப் பகிர்ந்து, ரசிகர்களிடம் முடி வெட்ட வேண்டுமா, வேண்டாமா என்று அறிவுரைக் கேட்டு வருகிறார். அவரது கேள்விக்கு ரசிகர்கள் பல யோசனைகளை அள்ளி வீசி வருகின்றனர்.