கிரிக்கெட்

கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன் கொரோனாவை முழுமையாக ஒழிக்க வேண்டும் - யுவராஜ்சிங் + "||" + Yuvraj Singh Feels Coronavirus Needs To Be "Completely Eradicated" For Cricket To Resume

கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன் கொரோனாவை முழுமையாக ஒழிக்க வேண்டும் - யுவராஜ்சிங்

கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன் கொரோனாவை முழுமையாக ஒழிக்க வேண்டும் - யுவராஜ்சிங்
கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன் கொரோனாவை முழுமையாக ஒழிக்க வேண்டும் என யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

உலகம் முழுவதும் கொரோனாவால் 29 லட்சத்து 21 ஆயிரத்து 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 03 ஆயிரத்து 299 பேர் பலியாகி உள்ளனர். 8 லட்சத்து 37 ஆயிரத்து 045 பேர் மீண்டுள்ளனர். உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள டெல்லியில்,2,625 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் பிபிசியின் 'தி தூஸ்ரா' என்ற பேட்டியில் கூறியிருப்பதாவது:-

வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு விளையாட்டின் பாதுகாவலர்களுக்கு மிக முக்கியமாக இருக்கவேண்டும் என்பதால் கொரோனா இல்லாத உலகமாக மாறும் போது மட்டுமே கிரிக்கெட் மீண்டும் தொடங்க வேண்டும். மற்ற விளையாட்டுகளைப் போலவே, சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டும் கொரோனாவால் சீர்குலைந்துள்ளது.

எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், முதலில் நாம் நம் நாடுகளையும், உலகத்தையும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க வேண்டும். இது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் அல்லது 90-95 சதவிகிதம் குறைய வேண்டும், ஏனெனில் இது தொடர்ந்து அதிகரித்தால் வெளியே வர விளையாட்டு வீரர்கள் பயப்படுவார்கள். மைதானத்தில் விளையாடுவதற்கும் ஓய்வறைக்குச் செல்வதற்கும் தயங்குவார்கள்.நாட்டுக்காகவோ லீக் அணிக்காகவோ விளையாடும்போது ஏற்கெனவே வீரர்களுக்கு அழுத்தம் இருக்கும். அதனால் விளையாடும்போது கொரோனா குறித்த பயம் இருக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. யுவராஜ்சிங்கின் சவாலை ஏற்று கண்களை துணியால் கட்டிக்கொண்டு அசத்திய தெண்டுல்கர்
யுவராஜ்சிங்கின் சவாலை ஏற்று கண்களை துணியால் கட்டிக்கொண்டு தெண்டுல்கர் அசத்தினார்.