2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: தோல்வியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை - லோகேஷ் ராகுல்


2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: தோல்வியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை - லோகேஷ் ராகுல்
x
தினத்தந்தி 26 April 2020 11:16 AM GMT (Updated: 26 April 2020 11:16 AM GMT)

2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தோல்வியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை என இந்திய அணி வீரர் லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

'தி மைண்ட் பிஹைண்ட்' நிகழ்ச்சியில் ஊரடங்கு அனுபவம் மற்றும் ஆர்.சி.பிக்காக விளையாடிய அனுபவம் மற்றும் கிரிக்கெட் துறையில் தனது ஆரம்ப ஆண்டுகள் பற்றி இந்திய அணி வீரர் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

நானும் எனது குடும்பத்தினரும் பெங்களூரில் இருக்கிறோம், நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். பயிற்சியில் என்னால் என்ன செய்ய முடியுமோ முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன்.

தற்போது வீட்டில் நேரத்தை செலவிடுவது நன்றாகத்தான் இருக்கிறது. தொடர்ச்சியாக நீண்ட காலம் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது இடைவெளி எப்போது கிடைக்கும் என்று நினைப்போம். ஆனால் தற்போது எங்களுக்கு பெரிய இடைவெளி கிடைத்து உள்ளது.

இந்த நேரத்தில் நம் அனைவருக்கும் இதனை தான் காலம் கற்பிக்கிறது என்று நான் நினைக்கிறேன்; வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள், ஆரோக்கியமாக இருப்பதன் முக்கியத்துவம் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது. நீண்ட, நீண்ட காலத்திற்குப் பிறகு எனது பிறந்தநாளை எனது குடும்பத்தினருடன் செலவிட வேண்டியிருந்தது, அதனால் மிகவும் சிறப்பாக இருப்பதை உணர்ந்தேன்.

இதுபோன்ற பெரிய இடைவெளியை நாங்கள் விரும்பவில்லை. எந்த போட்டியையாவது மாற்ற விருப்பமா? என்று கேட்டால் கடந்த ஆண்டு (2019) நடந்த உலக கோப்பை அரை இறுதியைத்தான் சொல்வேன். அந்த தோல்வியில் இருந்து எங்கள் அணியை சேர்ந்த வீரர்கள் இன்னும் மீளவில்லை என்றே தான் நன் நினைக்கிறேன். 

அந்த தோல்வி சீனியர் வீரர்களுக்கு எப்படி இருந்து இருக்கும் என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. உலக கோப்பை போட்டி தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், அரைஇறுதியில் சந்தித்த தோல்வி மிகவும் கடினமானதாக இருந்தது. இன்னும் சில சமயங்களில் அந்த கெட்ட கனவுடன் தான் எழுந்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story