கிரிக்கெட்

ஐ.சி.சி. முடிவுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்ப்பு + "||" + Veteran cricketers weigh in on ICC contemplating legalisation of ball

ஐ.சி.சி. முடிவுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்ப்பு

ஐ.சி.சி. முடிவுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்ப்பு
ஐ.சி.சி. முடிவுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி, 

கொரோனா தாக்கம் முடிந்து கிரிக்கெட் போட்டி தொடங்கும் போது களத்தில் வீரர்கள் பந்தை பளபளப்பாக்க எச்சில் அல்லது வியர்வையால் (வைரஸ் பரவும் அபாயம்) தேய்ப்பதற்கு பதிலாக செயற்கை பொருளை பயன்படுத்தி தேய்க்க அனுமதி அளிப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பரிசீலித்து வருகிறது. இந்த முடிவுக்கு வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்கள் மைக்கேல் ஹோல்டிங் (வெஸ்ட் இண்டீஸ்), வக்கார் யூனிஸ் (பாகிஸ்தான்) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ‘பந்தை எச்சில் அல்லது வியர்வையால் தேய்ப்பது களத்தில் இயல்பாகவே நடக்கக்கூடிய ஒன்று. இதை கட்டுப்படுத்த முடியாது’ என்று வக்கார் யூனிஸ் கூறியுள்ளார். ‘வீரர்கள் அனைவரும் மருத்துவ ரீதியாக உரிய பாதுகாப்பான சூழலில் விளையாடுவார்கள் என்கிற போது, வீரர்களின் எச்சில் குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்’ என்று ஹோல்டிங் கேள்வி எழுப்பியுள்ளார்.