கிரிக்கெட்

இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன் - சச்சின் தெண்டுல்கர் + "||" + I am always ready to give advice to young players - Sachin Tendulkar

இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன் - சச்சின் தெண்டுல்கர்

இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன் - சச்சின் தெண்டுல்கர்
இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்க எப்போதும் தயாராக இருப்பதாக சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

* கொரோனா பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்ட 2017-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய போது அணிந்திருந்த சீருடை, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் முச்சதம் விளாசிய போது பயன்படுத்திய பேட் ஆகியவற்றை ஏலத்தில் விடப்போவதாக பாகிஸ்தான் வீரர் அசார் அலி அறிவித்துள்ளார்.

*இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவுடன் நான் பல முறை பேசியிருக்கிறேன். அவர் மிகவும் திறமையான வீரர். அவருக்கு உதவுவதில் எனக்கு மகிழ்ச்சி. களத்திலும், வெளியிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கி இருக்கிறேன். இளம் வீரர்களுக்கு ஆலோசனை வழங்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்’ என்றார்.

* ‘கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து இல்லாவிட்டால், எந்த விளையாட்டு போட்டியையும் நடத்த முடியாது’ என்று டேபிள் டென்னிஸ் வீரரான தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க ஆலோசனை நாராயணசாமி தலைமையில் நடந்தது
கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை நடந்தது.