கிரிக்கெட்

இந்தி பாடலை பாடி அசத்திய ஆண்ட்ரே ரசல் + "||" + KKR posts Throwback video of Andre Russell Singing Hit Bollywood Song. Watch

இந்தி பாடலை பாடி அசத்திய ஆண்ட்ரே ரசல்

இந்தி பாடலை பாடி அசத்திய ஆண்ட்ரே ரசல்
கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரசல் தனது பிறந்த நாளில் இந்தி பாடலை பாடி அசத்தினார்.
மும்பை,

ஆண்ட்ரே ரசல் இன்று தன்னுடைய 32வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உரிமையாளரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) சிறப்பு வீடியோவுடன் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி வெளியிட்டது. 

கேகேஆர் தன்னுடைய  டுவிட்டர் பக்கத்தில், ஆண்ட்ரே ரசல் “சுபா ஹோனே நா டி” என்ற பிரபல பாலிவுட் பாடலைப் பாடும் வீடியோவைப் பதிவிடப்பட்டுள்ளது. இந்தி பாடலைப் பாடும் பிறந்தநாள் வீரர் @Russell12A வீடியோவைப் பாருங்கள். ‘தேசி பாய்ஸ்' என்ற திரைப்படத்தில் வரும் ‘சுபா ஹோனே நா டி' என்ற பாடலைப் பாடுகிறார். வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு நீங்கள் களத்தில் மற்றும் வெளியே எங்களை மகிழ்விக்க வேண்டும்! #HappyBirthdayAndre #DreRuss #Bollywood #KolkataKnightRiders #Cricket,” என்று கேகேஆர் அந்த வீடியோவுக்கு பெயர் தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்திப் பாடலை பாடிய ஆண்ட்ரே ரசலை, அவரது கேகேஆர் அணியினர் பாராட்டினர்.  கடந்த ஆண்டு ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்கு முன்னணி ரன் எடுத்தவர் ஆண்ட்ரே ரசல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...