தெலுங்கு, இந்தி பாடலுக்கு மனைவியுடன் வார்னர் நடனம்


தெலுங்கு, இந்தி பாடலுக்கு மனைவியுடன் வார்னர் நடனம்
x
தினத்தந்தி 1 May 2020 12:09 PM GMT (Updated: 2020-05-01T17:39:02+05:30)

தெலுங்கு, இந்தி பாடலுக்கு மனைவியுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடனமாடி உள்ளார்.

மும்பை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய வீடுகளில் ஓய்வெடுத்து வருகிறார்கள்.

ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் ஐபிஎல் அணியில் விளையாடும் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்  டேவிட் வார்னர் தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து ஷிலா கி ஜாவனி (இந்தி), புட்டா பூமா மற்றும் வைகுந்தபுரமாலு (தெலுங்கு) ஆகிய திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடி அதன் விடியோக்களை டிக் டாக் மற்றும் இன்ஸ்டகிராம் தளங்களில் வெளியிட்டு வருகிறார். வார்னரின் இந்த விடியோக்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவி கேன்டிசுடன் தெலுங்கு பாடலுக்கு அவர் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story