கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தில் உமிழ்நீர், வியர்வை பயன்படுத்த தடை


கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தில் உமிழ்நீர், வியர்வை பயன்படுத்த தடை
x
தினத்தந்தி 2 May 2020 8:05 AM GMT (Updated: 2 May 2020 12:32 PM GMT)

கிரிக்கெட் போட்டிகளின் பந்தில் பளபளப்பாக்க உமிழ்நீர், வியர்வை பயன்படுத்த ஆஸ்திரேலிய தடை விதித்துள்ளது.

சிட்னி,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், அந்த நாடு முழுவதும் பரவி, உலகமெங்கும் கால் பதித்துவிட்டது.  உலகம் முழுவதும் கொரோனாவால் 34 லட்சத்து ஆயிரத்து 394 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 39 ஆயிரத்து 615 பேர் பலியாகி உள்ளனர். 10 லட்சத்து 83 ஆயிரத்து 816 பேர் மீண்டுள்ளனர்.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் காரணமாக உலக விளையாட்டில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிரிக்கெட்டில் கைகுலுக்குவது ஏற்கனவே தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய விளையாட்டு அமைப்பு சார்பில், மத்திய, மாகாண அரசுகள், விளையாட்டு அமைப்புகள், மருத்துவ வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து மூன்று பிரிவுகளாக புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. 

லெவல் ஏ': இப்போதைய நிலையில் அனைத்து வித பயிற்சிக்கும் தடை, தனிப்பட்ட முறையில் ஈடுபடலாம்.

'லெவல் பி': வரும் வாரங்களில் குறைந்த பவுலர்களுடன், பேட்ஸ்மேன்கள் வலைப்பயிற்சிக்கு அனுமதி. ஒருவருக்கு ஒருவர் தொடும் அளவிலான பயிற்சிகளுக்கு தடை, பயிற்சின் போது பந்தை பளபளப்பாக்க உமிழ்நீர்/வியர்வை பயன்படுத்த தடை.

'லெவல் சி': சில மாதங்களுக்குப் பின், முழு அளவிலான பயிற்சி, போட்டிகள் நடத்தலாம். பந்தை பளபளப்பாக்க உமிழ்நீர்/வியர்வை பயன்படுத்த தடை தொடரும்.

கிரிக்கெட் போட்டிகளில் பந்தில் பளபளப்பாக்க வேறு ஏதாவது ஒரு பொருளை பயன்படுத்தலாமா என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story