கிரிக்கெட்

அதிரடியாக பேட்டிங் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன் - ரோகித் சர்மா + "||" + Rohit Sharma expected to bat soon

அதிரடியாக பேட்டிங் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன் - ரோகித் சர்மா

அதிரடியாக பேட்டிங் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன் - ரோகித் சர்மா
அதிரடியாக பேட்டிங் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
மும்பை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. லாக் டவுனில் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் இல்லங்களில் பயிற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

உள் அரங்கில் கிரிக்கெட் விளையாட போதுமான இடம் இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறேன். ஆனால் மும்பையில் இடங்கள் எல்லாம் நெரிசலாக காணப்படுகின்றன. எனவே உங்கள் அபார்ட்மெண்டை விட்டு வெளியேற முடியாது.

மும்பையில் உங்களுக்கென விளையாட்டுப் பகுதிகளை உள்ளடக்கிய சொந்த வீடு வாங்குவது அவ்வளவு எளிதல்ல. இங்கு எல்லாம் விலை அதிகம்.  நான் அபார்ட்மெண்டில் வசிக்கிறேன். நல்லவேளையாக அதில் பால்கனி உண்டு. எனது பயிற்சியாளர் கூறியபடி அந்த இடத்தில் உடற்பயிற்சி செய்து வருகிறேன். உடற்பயிற்சிக்கூடங்களை விரைவில் திறப்பார்கள். அப்போது அங்குச் சென்று பயிற்சி மேற்கொள்வேன்.

என்னுடைய பேட்டிங் பயிற்சியை, ஆட்டத்தை மிஸ் செய்கிறேன். அதிரடியாக பேட்டிங் செய்யும் நாளை எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக ஆட விரும்புகிறேன் - இந்திய கேப்டன் கோலி பேட்டி
20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரராக களம் காண விரும்புவதாக இந்திய கேப்டன் கோலி கூறியுள்ளார்.
3. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் அஸ்வின், ரோகித் சர்மா முன்னேற்றம்
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின், ரோகித் சர்மா வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளனர்.
4. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தல்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.