கிரிக்கெட்

டோனிக்காக ஒரு பாடலை எழுதுகிறேன் சன்னி லியோனிடம் பகிர்ந்த டுவைன் பிரோவோ + "||" + "Working On Special Song Designed For MS Dhoni": Dwayne Bravo Tells Sunny Leone

டோனிக்காக ஒரு பாடலை எழுதுகிறேன் சன்னி லியோனிடம் பகிர்ந்த டுவைன் பிரோவோ

டோனிக்காக ஒரு பாடலை எழுதுகிறேன் சன்னி லியோனிடம் பகிர்ந்த டுவைன் பிரோவோ
டோனிக்காக ஒரு பாடலை எழுதுகிறேன் சன்னி லியோனிடம் ஆல்ரவுண்டர் டுவைன் பிரோவோ பகிர்ந்து கொண்டார்.
மும்பை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய வீடுகளில் ஓய்வெடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் ஊரடங்கு காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் அரட்டை அடிப்பது என்பது ஒரு புதிய கலாச்சாரமாக உருவெடுத்துள்ளது.

பலரும் இந்தப் பக்கத்தில் தாங்கள் ரசிக்கும் பிரபலங்களைச் சந்தித்து உரையாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிராவோ சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சென்னை சூப்பர்கிங்ஸ் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, இன்ஸ்டா பக்கத்தின் நேரலையில் பாலிவுட் நடிகை சன்னி லியோனிடம் உரையாடினார். அப்போது அவர், 

இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனிக்கு ஒரு சிறப்புப் பாடலை இயற்றி வருவதாக பிராவோ தெரிவித்துள்ளார். 

இந்த உரையாடலின் போது  சன்னி லியோன், வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டரிடம் ஏதாவது புதிய பாடலில் வேலைசெய்கிறீர்களா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த பிராவோ, டோனிக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு பாடலை எழுதப் போவதாகவும் மேலும் அந்தப் பாடலின் தலைப்பு எண் 7 என்றும் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய பிராவோ, நான் அவரது வாழ்க்கை, அவரது சாதனைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என நாம் அனைவரும் வைத்திருக்கும் அன்பின் அடையாளம் போன்ற அனைத்தையும் அடிப்படையாக வைத்து இந்தப் பாடலை எழுதப் போகிறேன். பாடலின் தலைப்பு எண் 7 என்று ரகசியத்தை உடைத்தார் பிராவோ. சமீபத்தில், பிராவோ கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பற்றிய புதிய பாடலை வெளியிட்டார். அவர் அந்தப் பாடலுக்கு We not giving up என்று தலைப்பிட்டிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.