கிரிக்கெட்

அஸ்வின் மீது பொறாமையா? ஹர்பஜன்சிங் பதில் + "||" + Are you jealous of Ashwin? Harbhajan Singh's answer

அஸ்வின் மீது பொறாமையா? ஹர்பஜன்சிங் பதில்

அஸ்வின் மீது பொறாமையா? ஹர்பஜன்சிங் பதில்
அஸ்வின் மீது பொறாமையா என்பது குறித்து ஹர்பஜன்சிங் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி, 

இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் 39 வயதான ஹர்பஜன்சிங்கும், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வினும் இன்ஸ்டாகிராம் மூலம் நேரடியாக கலந்துரையாடினர். கிரிக்கெட் தொடர்பான பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது ஹர்பஜன்சிங் கூறும் போது, ‘எங்களிடையே நிறைய போட்டி பொறாமை இருப்பதாக பலரும் சொல்வார்கள். ஆனால் அஸ்வின் மீது ஒரு போதும் பொறாமை கொண்டதில்லை. இப்போது உலகின் சிறந்த ஆப்-ஸ்பின்னர் அஸ்வின் தான். இதேபோல் ஆஸ்திரேலியாவின் நாதன் லயனும் சிறந்த ஆப்-ஸ்பின்னராக திகழ்கிறார். அஸ்வின் ஒரு ஜாம்பவானாக உருவெடுத்து வருகிறார். அவர் தொடர்ந்து நல்ல உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் இன்னும் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. உலக அளவில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் கூட இடம் பிடிக்கலாம்’ என்று குறிப்பிட்டார்.

இந்திய அணியில் அஸ்வினின் சுழல் ஜாலம் மேலோங்கியதும், ஹர்பஜன்சிங் ஒரேயடியாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 33 வயதான அஸ்வின் இதுவரை 71 டெஸ்டுகளில் ஆடி 365 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரெய்னாவை தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...