தினம் தினம் வீடியோ வெளியிட்டு அசத்தும் டேவிட் வார்னர்


தினம் தினம் வீடியோ வெளியிட்டு அசத்தும் டேவிட் வார்னர்
x
தினத்தந்தி 7 May 2020 11:50 AM GMT (Updated: 2020-05-07T17:20:08+05:30)

சமூகவலைதளங்களில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தினம், தினம் ஒரு வீடியோ வெளியிட்டு அசத்தி வருகிறார்.

மும்பை,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய வீடுகளில் ஓய்வெடுத்து வருகிறார்கள்.

ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் ஐபிஎல் அணியில் விளையாடும் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்  டேவிட் வார்னர் தனது அனைத்து சமூக வலைதளங்களிலும்  டிக்டாக் வீடியோக்களைப் பகிர்வதன் மூலம் சமூக ஊடகங்களில் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 

தனது மிகச் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், வார்னர் ஒரு மது கண்ணாடிக் கோப்பையை, ஒரு இசைக் கருவியாகப் பயன்படுத்துகிறார். அது ஒரு தொப்பியின் உதவியுடன் அவரது நெற்றியில் கட்டப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் தனது இன்ஸ்டாகிராம் பதிவை, “பிரபலமான கோரிக்கையால் திரும்பவும் செய்யப்பட்டிருக்கிறது !! எனக்குக் கூடுதல் ஆப்ஷன்ஸ் கொடுங்கள்” என அதில் கூறியுள்ளார்.

Next Story