அனைத்தும் எனக்கு ஏன் நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை பிரபல கிரிக்கெட் வீரர் வேதனை


அனைத்தும் எனக்கு ஏன் நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை பிரபல கிரிக்கெட் வீரர் வேதனை
x
தினத்தந்தி 8 May 2020 6:27 AM GMT (Updated: 8 May 2020 6:27 AM GMT)

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சோலோ குவேனி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டோரியா,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  உலக அளவில் இதுவரை 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதுவரை 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 56,300 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சோலோ குவேனி (Solo Nqweni) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது பற்றி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஜிபிஎஸ் என்கிற அரியவகை நோயால் கடந்த வருடம் பாதிக்கப்பட்டேன். 10 மாதங்களாக இந்த நோயை விரட்டப் போராடி வருகிறேன். அதிலிருந்து பாதிதான் மீண்டு வந்திருக்கிறேன். காசநோயும் வந்தது. கல்லீரலும் சிறுநீரகமும் பழுதடைந்துள்ளன. இப்போது, கொரோனா வைரஸாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏன் எல்லாமே நடக்கிறது என நிஜமாகவே தெரியவில்லை என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

26 வயது சோலோ, 2012-ல் தென் ஆப்பிரிக்க யு-19 அணியில் விளையாடியுள்ளார். ஈஸ்டர்ன் பிராவின்ஸ் அணிக்காக விளையாடிய சோலோ, லீக் கிரிக்கெட்டில் வாரியஸ் அணிக்காகவும் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Next Story