கிரிக்கெட்

எனக்கு மிகவும் பிடித்ததில் ஒன்று - வீடியோ பகிர்ந்த யுவராஜ் சிங்! + "||" + yuvi This has to be one of my favourite shots in my career I have played

எனக்கு மிகவும் பிடித்ததில் ஒன்று - வீடியோ பகிர்ந்த யுவராஜ் சிங்!

எனக்கு மிகவும் பிடித்ததில் ஒன்று -  வீடியோ பகிர்ந்த யுவராஜ் சிங்!
எனது வாழ்க்கையில் நான் விளையாடிய இந்த ஷாட் எனக்கு மிகவும் பிடித்ததில் ஒன்று என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் யுவராஜ் சிங், இந்தியன் பிரீமியர் லீக்கின் 2017 சீசனின் போது ஒரு போட்டியில் சிக்ஸ் அடித்த தன்னுடைய த்ரோபேக் வீடியோ ஒன்றை  சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். 

2017ம் ஆண்டில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தில் ஒரு பகுதியாக இருந்த யுவராஜ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில், கிரிக்கெட்டில் கடினமான ஷாட் என்று கூறப்படும் ஒரு சிக்ஸை அடித்தார். யுவராஜ் சிங் அந்த சிக்ஸின் வீடியோவைப் பகிர்ந்து, எனது வாழ்க்கையில் நான் விளையாடிய இந்த ஷாட் எனக்கு மிகவும் பிடித்ததில் ஒன்றாக இருக்க வேண்டும்! ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு கவர்களைத் தாண்டி ஒரு சிக்ஸர் அடிப்பது மிகவும் கடினமான ஒன்று, என்று அதில் கூறியுள்ளார்.

யுவராஜ் சிங், கடந்த ஆண்டு ஜூன் 10ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.