கிரிக்கெட்

ஒரு கிரிக்கெட் போட்டி எவ்வாறு செல்கிறது என்பதைக் கணிப்பதில் டோனி வல்லவர் - மைக்கல் ஹசி + "||" + MS Dhoni is better at reading games than Ponting” Michael Hussey compares the two captains

ஒரு கிரிக்கெட் போட்டி எவ்வாறு செல்கிறது என்பதைக் கணிப்பதில் டோனி வல்லவர் - மைக்கல் ஹசி

ஒரு கிரிக்கெட் போட்டி எவ்வாறு செல்கிறது என்பதைக் கணிப்பதில் டோனி வல்லவர் -  மைக்கல் ஹசி
ஒரு கிரிக்கெட் போட்டி எவ்வாறு செல்கிறது என்பதைக் கணிப்பதில் டோனி வல்லவர் என முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மைக்கல் ஹசி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பேட்ஸ்மேன் மைக்கல் ஹசி, ரிக்கி பாண்டிங் மற்றும் டோனி இடையிலான கேப்டன்ஷிப் தலைமைப்பண்பு குறித்து கூறியுள்ளார். 

அவர் டோனி குறித்து கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி மிகவும் அமைதியான மனிதர். ஒரு போட்டியைத் திறனாய்வு செய்து அதன் போக்கைக் கணிப்பதில் பாண்டிங்கை விட வல்லவர். அதற்கு ஏற்றார் போல மைதானத்தில் வியூகங்களை வகுக்கக் கூடியவர். 

அந்த நேரத்தில் நானே சில நேரம் யோசிப்பேன், டோனி செய்வது சரியா? அவரின் முடிவுகள் எங்கே போகும் என்று. ஆனால் போட்டியின் முடிவு சாதகமாகவே இருக்கும். 

அது என்னை ஆச்சரிய மூட்டுவாதாக அமைந்தது. டோனியும் பாண்டிங்கும் கேப்டன்சியில் அவர்கள் பாணி வேறு வேறானது என்றே கூறலாம். இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாகப் பார்க்கப்படுகிறது என்றே கருதுகிறேன்.

இங்கே கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாகப் பார்க்கமாட்டார்கள். வாழ்வின் அங்கமாகவே கருதுகிறார்கள். சில நேரங்களில் வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் வந்து செல்லும். இங்கு வெற்றி மட்டுமே ரசிகர்கள் பார்ப்பார்கள், அதனால் தான் இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது சுலபமல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.