கிரிக்கெட்

எல்லா காலத்திலும் பிடித்தமான பேட்ஸ்மேன் யார்? - லோகேஷ் ராகுல் பதில் + "||" + Who is the favorite batsman of all time? - Lokesh Rahul's answer

எல்லா காலத்திலும் பிடித்தமான பேட்ஸ்மேன் யார்? - லோகேஷ் ராகுல் பதில்

எல்லா காலத்திலும் பிடித்தமான பேட்ஸ்மேன் யார்? - லோகேஷ் ராகுல் பதில்
எல்லா காலத்திலும் பிடித்தமான பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு லோகேஷ் ராகுல் பதில் அளித்துள்ளார்.

* இந்திய கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுலிடம், உங்களுக்கு எல்லா காலத்திலும் பிடித்தமான பேட்ஸ்மேன் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ்’ என்று பதில் அளித்தார்.

* பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கலந்துரையாடல் ஒன்றில் பேசும்போது, ‘இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் விளையாடுகிறார்கள். ஜஸ்பிரித் பும்ரா தற்போது இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளராக விளங்குகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இல்லாத போது அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதே எனது அறிவுரை. நான் விளையாடிய காலத்தில் 6 மாதங்கள் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவேன். 6 மாதம் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பேன். இப்போதைய காலக்கட்டத்தில் கவுண்டி போட்டிகளில் ஆடுவதற்கு நேரம் கிடைப்பது கடினம்’ என்றார்.

* ஸ்பெயினில் லா லிகா கிளப் கால்பந்து போட்டியை மீண்டும் தொடங்குவதற்காக அந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணி வீரர்கள், பயிற்சியாளர், உதவியாளர்களுக்கு கொரோனா பாசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ரியல்சோசிடட் வீரர் அலெக்ஸி ரெமிரோ உள்பட 5 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். இந்த தொடரில் ஒவ்வொரு 2 அல்லது 3 நாள் இடைவெளியில் மற்றொரு அணியை எதிர்கொள்கிறோம். வித்தியாசமான சூழலில் விளையாடுவது தான் ஐ.பி.எல்.ன் தனித்துவம். நிறைய புதிய வீரர்களுடன இணைந்து விளையாடுகிறோம். இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களுடனும் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறோம். இது அடிக்கடி காண முடியாத ஒன்று’ என்றார்.

* இலங்கை முன்னாள் வீரர் தில்ஷன், தனது காலத்தில் ஆடிய வீரர்களில் இருந்து சிறந்த ஒரு நாள் போட்டி லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அவரது கனவு அணியில் இந்திய தரப்பில் சச்சின் தெண்டுல்கர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.