டி20 கிரிக்கெட்டில் பந்து வீசக் கடினமான பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் - ஜோஃப்ரா ஆர்ச்சர்


டி20 கிரிக்கெட்டில் பந்து வீசக் கடினமான பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் - ஜோஃப்ரா ஆர்ச்சர்
x
தினத்தந்தி 11 May 2020 6:21 AM GMT (Updated: 11 May 2020 6:21 AM GMT)

டி20 கிரிக்கெட்டில் பந்து வீசக் கடினமான பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் என ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.

சென்னை,

லாக்டவுனில் மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போலவே இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தன்னுடைய நேரத்தை வீட்டில் செலவழிக்கிறார். ராயல்ஸ் பாட்காஸ்டின் ஒரு அத்தியாயத்தின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் தனது முன்னாள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் இஷ் சோதியுடன் உரையாடினார். 

அதில், இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் தான் விளையாடிய அனைத்து லீக்குகளிலும் டி20 கிரிக்கெட்டில் பந்து வீசக் கடினமான பேட்ஸ்மேன் என்று நியூசிலாந்து லெக் ஸ்பின்னரிடம் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறினார். அவர் பேசிய எபிசோடில் இருந்து ஒரு கிளிப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டுவிட்டரில் பகிர்ந்து கொண்டது.

வெளிப்படையாக, கே.எல்.ராகுல். நாங்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாபுடன் விளையாடியபோது அவரை இரண்டு முறை சந்தித்தேன். அநேகமாக என்னை விடச் சிறந்தவர் அவர்தான் ஆர்ச்சர் சோதியிடம் கூறினார்.

கே.எல்.ராகுல் கடந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்று பேசப்பட்டார். 28 வயதான அவர் 14 ஆட்டங்களில் ஒரு ஆட்டமிழக்காத சதம் மற்றும் ஆறு அரைசதங்களுடன் 593 ரன்கள் எடுத்தார்.

ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்ததை அடுத்து கே.எல்.ராகுல் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story