கொரோனா ஊரடங்கால் அனுஷ்கா சர்மாவுடன் நீண்ட நேரம் செலவிட முடிகிறது - விராட் கோலி


கொரோனா ஊரடங்கால் அனுஷ்கா சர்மாவுடன் நீண்ட நேரம் செலவிட முடிகிறது - விராட் கோலி
x
தினத்தந்தி 12 May 2020 7:01 AM GMT (Updated: 2020-05-12T12:31:44+05:30)

கொரோனா ஊரடங்கால் அனுஷ்கா சர்மாவுடன் நீண்ட நேரம் செலவிட முடிகிறது என விராட் கோலி கூறியுள்ளார்.

மும்பை,

சுறுசுறுப்பான கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை மிகவும் பிஸியாக இருப்பதால், அவர்கள் தனது குடும்ப உறுப்பினர்களுடன் செலவழிக்க நேரம் கிடைப்பதில்லை தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோயால் லாக் டவுன் கிரிக்கெட் வீரர்களுக்கு தங்கள் அன்புக்குரியவர்களுடன் செலவழிக்கும் நேரம் கிடைத்துள்ளது.  

இந்தநிலையில் லாக் டவுனில் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். 

இந்தநிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி கூறியதாவது:

எனக்கு அனுஷ்காவைத் தெரிந்த நாள் முதல், இப்போதுதான் அவருடன் நீண்ட நேரம் செலவழித்து வருகிறேன்.பொதுவாக நான் சுற்றுப்பயணத்தில் இருப்பேன், அல்லது அனுஷ்கா சர்மா படப்பிடிப்பில் இருப்பார். 

அவர் மும்பையில் படப்பிடிப்பில் இருக்கும்போது நான் வீட்டில் இருப்பேன். அல்லது நான் சென்று அவரைப் பார்ப்பேன். இப்போது தான் தினமும் இருவரும் வீட்டில் உள்ளோம். இதுபோல இருவரும் வீட்டில் ஒன்றாக நேரத்தைச் செலவழிப்போம் என நினைக்கவில்லை. 

ஒருவர் மீது மற்றவர் அதிக நம்பிக்கை வைத்திருப்போம். இப்போது அந்த நம்பிக்கை இன்னும் வலுவாகியுள்ளது. இந்த நேரத்தில் நாங்கள் ஒன்றாகக் மகிழ்ச்சியாக இருப்பது ஒரு வகையான ஆசீர்வாதம்..

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story