கிரிக்கெட்

இந்தியர்கள் மட்டும் பங்கேற்கும் ஐ.பி.எல்: ராஜஸ்தான் ராயல்சின் யோசனையை நிராகரித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் + "||" + Only Indians participating in IPL: Chennai Super Kings reject Rajasthan Royals idea

இந்தியர்கள் மட்டும் பங்கேற்கும் ஐ.பி.எல்: ராஜஸ்தான் ராயல்சின் யோசனையை நிராகரித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியர்கள் மட்டும் பங்கேற்கும் ஐ.பி.எல்: ராஜஸ்தான் ராயல்சின் யோசனையை நிராகரித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தியர்கள் மட்டும் பங்கேற்கும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தும் ராஜஸ்தான் ராயல்சின் யோசனையை சென்னை சூப்பர் கிங்ஸ் நிராகரித்தது
மும்பை, 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் வர முடியாத அளவுக்கு தற்போது பயணக்கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே இந்திய வீரர்களை மட்டும் வைத்து குறைந்த நாட்கள் கொண்ட ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாக தலைவர் ரஞ்சித் பர்தாகூர் சமீபத்தில் கூறியிருந்தார். அந்த அணியின் யோசனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிராகரித்துள்ளது. இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்திய வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணிக்கு விருப்பம் இல்லை. அவ்வாறு விளையாடுவது இன்னொரு சையத் முஸ்தாக் அலி கோப்பை (உள்ளூர் 20 ஓவர் போட்டி) போட்டி போன்று தான் இருக்கும். ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்பட்ட பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் எங்களுடன் ஆலோசனை எதுவும் நடத்தவில்லை. தற்போதைய நிலைமையில் விவாதிப்பதற்கு எதுவும் இல்லை. கொரோனா தாக்கம் தணிந்து உரிய நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் நல்ல முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆண்டின் இறுதியில் ஐ.பி.எல். நடக்கும் என்று நம்பலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பதிவு: மன்னிப்பு கோரினார் இஸ்ரேல் பிரதமரின் மகன்
இந்தியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டதற்கு மன்னிப்பு கோருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் தெரிவித்துள்ளார்.
2. இந்தியர்களை அழைத்துவர 6 நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம்
இந்தியர்களை அழைத்துவர 6 நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.