இந்தியா இரண்டு உலகக் கோப்பைகளாவது வெல்ல வேண்டும் - ரோகித் சர்மா


இந்தியா இரண்டு உலகக் கோப்பைகளாவது வெல்ல வேண்டும் - ரோகித் சர்மா
x
தினத்தந்தி 13 May 2020 9:51 AM GMT (Updated: 2020-05-13T15:21:35+05:30)

இந்தியா அடுத்த 3 ஆண்டுகளில் இரண்டு உலகக் கோப்பைகளாவது வெல்ல வேண்டும் என சுரேஷ் ரெய்னாவிடம் ரோகித் சர்மா வலியுறுத்தினார்.

மும்பை,

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னாவுடனான  இன்ஸ்டாகிராம் உரையாடலின் போது கூறியதாவது:-

உலகக் கோப்பையை வெல்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஒரு போட்டியில் நீங்கள் வென்றால் உங்கள் மனநிலை வித்தியாசமாக இருக்கும். உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் அந்த போட்டியுடன் இணைக்கப்பட்டு விடும். ஏழு-எட்டு அணிகளை வீழ்த்தி உலகக் கோப்பை வெல்வது கடினமானது. ஆனால், அதை நீங்கள் வென்றால், உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி இரண்டு மடங்காகும்,

மூன்று உலகக் கோப்பைகள், இரண்டு டி20 உலகக் கோப்பைகள் மற்றும் ஒரு 50 ஓவர் உலகக் கோப்பை போன்றவை நமக்கு ஒரு வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன், குறைந்தது இரண்டு உலகக் கோப்பைகளையாவது வெல்ல வேண்டும் என்று நான் பலமுறை கூறியுள்ளேன் என்று கூறினார்.

Next Story