கிரிக்கெட்

சச்சின் பந்துகளை அதிரடியாக அடித்தாலும் வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த மாட்டார்- பாகிஸ்தான் வீரர் + "||" + Rashid Latif hails Sachin Tendulkar, says playing 200 Tests is a unique feat

சச்சின் பந்துகளை அதிரடியாக அடித்தாலும் வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த மாட்டார்- பாகிஸ்தான் வீரர்

சச்சின் பந்துகளை அதிரடியாக அடித்தாலும் வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த மாட்டார்- பாகிஸ்தான் வீரர்
சச்சின் பந்துகளை அதிரடியாக அடித்தாலும் வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த மாட்டார் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் புகழ்ந்து உள்ளார்.
இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், விக்கெட்-கீப்பருமான ரஷித் லத்தீப் சச்சின் தெண்டுல்கருக்கு எதிராக விளையாடிய தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 

ரஷித் லத்தீப் கூறியதாவது:-

நான் கீப்பிங் செய்யும் போது பல்வேறு வீரர்கள் விளையாடுவார்கள். ஆனால் சச்சின் விளையாட வந்தால் மட்டும் அவர் வெளியேறக் கூடாது என எனது மனதில் தோன்றும். அவர் பேட்டிங் செய்வதை பார்க்கும் போது  எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். தொலைக்காட்சியில் அவரது ஆட்டத்தை பார்க்கும் போது இதுபோன்ற உணர்வு தோன்றியதில்லை. ஆனால் நான் அவர் பின்னால் நின்று கீப்பிங் செய்யும் போது அவர் வெளியேறக்  கூடாது என என் மனம் ஏங்கும். 

சச்சின் தெண்டுல்கர் தனித்தன்மை உடையவர். நான் அவரது பின்னால் நின்று எது சொன்னாலும், அவரது முகத்தில் சிரிப்பு மட்டும் தான் பதிலாக இருக்கும். மற்ற வீரர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். இந்த விஷயத்தில் சச்சினும், முகமது அசாருதீனும் தான் வித்தியாசமானவர்கள். எதிரில் விளையாடும் வீரர்களின் உணர்வுகளுக்கும் அவர்கள் மதிப்பளிப்பார்கள். அதனால் தான் சச்சினை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். 

குறிப்பாக விக்கெட் கீப்பர்களுக்கு அவரை மிகவும் பிடிக்க காரணம் இதுதான். சச்சின்  பந்துகளை அதிரடியாக அடித்தாலும், வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த மாட்டார். மைதானத்தில் விளையாடும் போது அவர் நடந்து கொள்ளும் விதம் எப்போதும் நினைவில் இருக்கும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தோனி இல்லை என்றால் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை அன்றே முடிந்திருக்கும்- கவுதம் காம்பீர் பரபரப்பு தகவல்
தோனி மட்டும் அன்று கோலியை பாதுகாக்காமல் இருந்திருந்தால், கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் என கவுதம் காம்பீர் தெரிவித்து உள்ளார்.
2. பழம்பெரும் கிரிக்கெட் வீரரும் வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்!
இந்திய அணியின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரும், மும்பையை சேர்ந்த வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்.
3. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெஸ்ட் தொடர்: மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து சென்றடைந்தது
டெஸ்ட் தொடரில் விளையாட மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து சென்றடைந்து உள்ளது.
5. ஷமியுடன் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மனைவி ஹசின் ஜஹான்
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியுடன் அவரது மனைவி ஹசின் ஜஹான் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.