கிரிக்கெட்

சச்சின், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மென் - கெவின் பீட்டர்சன் + "||" + "Doesn't Even Come Close": Kevin Pietersen's Big Statement On Virat Kohli-Steve Smith Debate

சச்சின், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மென் - கெவின் பீட்டர்சன்

சச்சின், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மென் - கெவின் பீட்டர்சன்
சச்சின், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மென் என கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. பல சர்வதேச போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன. லாக் டவுனில் இன்ஸ்டாகிராமில் ஜிம்பாப்வே முன்னாள் வீரர் பொம்மி மபாங்வாவுடன் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் உரையாடினார் அப்போது கூறியதாவது:

விராட் கோலி இந்திய அணிக்காக பல போட்டிகளை வெற்றி பெற்றுக் கொடுப்பதாகட்டும்,  அவர் கேப்டனாகவும் வீரராகவும் இருக்கும் அழுத்தங்களாகட்டும் அனைத்திற்கும் மேலாக சாதனைகளை அவர் விரட்டுவது போன்று யாரும் விரட்டமுடியாது. எனவே ஸ்டீவ் ஸ்மித் கோலிக்கு அருகில் கூட வர முடியாது.

சிறந்த பேட்ஸ்மேன் யார் என்றால் சச்சின் தெண்டுல்கரா? கோலியா? என்றாலும் விராட் தான் ஏனென்றால் அவர் சாதனைகளை, எண்ணிக்கைகளை விரட்டுகிறார். இந்தியாவுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கிறார். நாட்டுக்காக எத்தனை போட்டிகளை வென்று கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார். 

தற்போதைய ஐ.சி.சி தரவரிசைப்படி, டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித் முதலிடம் வகிக்கிறார். ஒருநாள் தரவரிசையில், விராட் கோலி முதலிடத்தில் அமர்ந்திருக்கிறார்.