கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு உஸ்மான் கவாஜா திரும்புவது கடினம்: ரிக்கி பாண்டிங் கருத்து + "||" + Usman Khawaja's return to the Australian cricket team is difficult: Ricky Ponting

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு உஸ்மான் கவாஜா திரும்புவது கடினம்: ரிக்கி பாண்டிங் கருத்து

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு உஸ்மான் கவாஜா திரும்புவது கடினம்: ரிக்கி பாண்டிங் கருத்து
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு உஸ்மான் கவாஜா திரும்புவது கடினம் என்று ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன், 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் பேட்ஸ்மேனான உஸ்மான் கவாஜா கடந்த ஆண்டு (2019) ஜூலை மாதம் முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை. ஆகஸ்டு மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு பிறகு டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்படவில்லை. அத்துடன் இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலிலும் உஸ்மான் கவாஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அளித்த ஒரு பேட்டியில், ‘நேர்மையாக சொல்லப்போனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு உஸ்மான் கவாஜா மீண்டும் திரும்புவது என்பது கடினம் தான். அவருக்காக நான் வருந்துகிறேன். அவர் மிகச் சிறந்த வீரர் என்றே நான் எப்பொழுதும் நம்பி வந்து இருக்கிறேன். சிறந்த வீரர்களின் கதை எளிதில் முடிந்து விட்டது என்று கருத முடியாது என்பது எனக்கு தெரியும். அவர் உள்ளூர் அணிக்காக விளையாடி ரன்களை குவித்தால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்ப முடியும். அவருக்கு மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைத்தால் யாருடைய நம்பிக்கையையும் பொய்க்க செய்யமாட்டார் என்று நிச்சயம் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.